இந்தியா வணிகம்

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

நேற்று இரவு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்காக சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக கூறினார்.

அதன்படி நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் இணைந்து திட்டத்தை அறிவித்துள்ளார். 

நிர்மலா சீதாராமன் உரையின் சிறப்பு அம்சங்கள்:-

பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

பொருளாதாரம் கட்டமைப்பு, தொழில்நுட்பம் போன்ற ஐந்து தூண்களை உருவாக்குவதற்காக இந்த “ஆத்ம நிர்பர் பாரத்” (சுயசார்பு பாரதம்) திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தவும்,  தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத திட்டம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  Vulkan Vegas Bonus Code » 500 Gutschein Dezember 202

திட்டத்தின் 5 முக்கிய தூண்கள் – பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள்.

எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது. இதனால் மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது.

தொழிற்துறை வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, தொழிலாளர் வளம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தபடுகிறது; நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது.

மக்கள் சொல்வதை கேட்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும் அரசு. நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48 லட்சம் டன் உணவு தானியம் விநியோகம். 

தூய்மை இந்தியா,  ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த கொரோனா காலத்தில் கைகொடுத்துள்ளன.

ALSO READ  பேருந்துகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன??????

பிரதான் மந்திரி கிசான் திட்டம்,  நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும்

ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 52,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. 

ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம். 

சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு.

சிறு,குறு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படும்.  

சிறு,குறு தொழில்களுக்கு வழங்கும் கடனை திருப்பி செலுத்தும் காலம் 12 மாதங்களுக்கு பின் தொடங்கும்.

கடனுக்கான உத்தரவாதத்தை வங்கி நிதி நிறுவனங்களுக்கு அரசு வழங்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியில் கொரோனா பலி எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு! 

News Editor

இந்திய வான் எல்லைக்குள் ரஃபேல் போர் விமானங்கள் வருகை… 

naveen santhakumar

ஆந்திராவில் புதிய திட்டம்…வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் !

News Editor