இந்தியா வணிகம்

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் உள்ள தனது இரண்டு உற்பத்தி ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வகைக் கார்களை உற்பத்தி செய்துவரும் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், தற்போது நான்கில் ஒரு பங்கு உற்பத்தி கூட நடைபெறாத நிலையில், நிறுவனத்துக்கு 2 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் மறைமலைநகர், குஜராத்தில் உள்ள சனண்ட் ஆகிய இரண்டு உற்பத்தி ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஆலைகளை மூடுவதனால் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ  Прогнозы И Ставки На Спорт Сегодня От Команды Профессионалов На Спорт-экспрес

ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவனம் ஏற்கனவே ஆலைகளை மூடிய நிலையில், இந்தியாவிலும் மூட முடிவு எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரை வாங்கியவர்களுக்கான சேவையையும் தொடர்ந்து அளிக்க உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை- பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி… 

naveen santhakumar

சமோசாவால் உயிரிழப்பு: விலை உயர்த்தியதால் தீக்குளித்த இளைஞர் …!

naveen santhakumar

உயிரிழக்கும் முன் கொலையாளி பற்றி துப்பு கொடுத்த ஹரியானா போலீஸ்…. 

naveen santhakumar