இந்தியா

ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று முதல் இலவச டிக்கெட் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருப்பதி:

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, திருமலை திருப்பதி கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று தான் வந்தது.

கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி அரசாங்கம் அறிவுறுத்திய கட்டுப்பாடுகளுடன் படி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் அங்கு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

ALSO READ  100 வது நாளை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம் ! 

இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நாள்தோறும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முன் வந்துள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று முதல்  தொடங்கியது.

திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் இன்று காலை 5 மணி முதல் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. அலிபிரியில் இன்று டிக்கெட் பெறும் பக்தர்கள் நாளை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாஜக தேசிய தலைவர் உடன் அமரிந்தர் சிங் சந்திப்பு?

Shanthi

நவம்பர் வரை இலவச உணவு தானியங்கள் – பிரதமர் மோடி …!

News Editor

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காவல் அதிகாரிக்கு மத்திய அரசு விருது

News Editor