இந்தியா

சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்து பாலியல் வன்கொடுமை செய்த அரக்கர்கள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி:

புதுச்சேரி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கன்னியப்பன்(55). இவர் வாத்துப் பண்ணை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த, (6 வயது முதல் 14 வயது உள்ள) ஐந்து சிறுமிகளை, அழைத்து வந்து, தங்க இடம் கொடுத்து, கடந்த 2 வருடங்களாக வாத்து மேய்ப்பதற்குப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக வந்த புகாரையடுத்து புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவினர், கடந்த 23-ஆம் தேதி சோதனையிட்டபோது, அங்கு 5 சிறுமிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் நலக் குழுவினர் 2 குழந்தைகளை மீட்டனர். பிறகு தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேலும் 3 குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.அவர்களை மீட்டு புதுச்சேரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். 

அவர்களை விசாரணை செய்ததிலிருந்து, வாத்து வளர்ப்புப் பண்ணையில், சுமார் 7 வயது முதல் 13 வயது வரையுள்ள 5 சிறுமிகளை, வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக வைத்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்தச் சிறுமிகளின் பெற்றோர்களிடம் ஒரு சிறுமிக்கு ரூபாய் 3,000 வீதம் கொடுத்து, இவர்களது வேலைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளதும், விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மீட்கப்பட்ட சிறுமிகள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. அதனையடுத்து கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள், கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை குழந்தைகள் நலக் குழு உறுதிசெய்தது.

ஆரம்பத்தில் இது தொடர்பாக, சிறுமிகள் ஏதும் தெரிவிக்கவில்லை. தொண்டு நிறுவனத்தினர் மூலம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி தந்து அவர்களிடம் விசாரித்தபோது, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்து தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளில் 13 வயதுடைய சிறுமி கருவுற்று இருக்கிறார். மேலும், மற்ற சிறுமிகளின் நிலை மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகுதான் தெரியவரும். இந்த குற்றச் சம்பவத்தில், 10 நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ  'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

அதனைத் தொடர்ந்து வாத்துப் பண்ணை உரிமையாளர்கள் மீது சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டது, பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை செய்தல் மற்றும் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தது,பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக் குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

ALSO READ  கொரோனாவால் உயிரிழந்த மகனின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்

பாதிக்கப்பட்ட சிறுமிகளை வாத்து மேய்க்கும் பண்ணையில் தங்க வைத்து, தொடர்ந்து அவர்களை அடிமைகளாக நடத்தி, இதுபோன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த குற்ற வழக்கில், 6 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 நபர்களை தேடி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளாவில் புல்லட்டுகளில் கெத்தாக வலம் வரும் பெண் போலீசார் காரணம் என்ன….

naveen santhakumar

1xbet`in Dünya Çempionatı Üçün Olan Möhtəşəm Kampaniyasında The Bentley Qazanın

Shobika

இந்த அப்பளம் கொரோனாவை விரட்டும் மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்திய பாபி ஜி அப்பளம்… 

naveen santhakumar