இந்தியா

இறுதி போட்டியில் காணாமல் போன ஈட்டி – எடுத்து சென்ற பாகிஸ்தான் வீரர்- நீரஜ் சோப்ரா பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி திடீரென காணாமல் போனதும் அதன் பின்னர் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1920 முதல் ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்று வருகிறது. அதனால் இந்த நூறு ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் இந்தியா பதக்கங்களை வென்று இருந்தாலும் தடகளத்தில் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை.

கடந்த 2008-ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கத்தை வென்று இருந்தாலும், தடகளத்தில் வெல்லவில்லை என்ற இந்த நூற்றாண்டு ஏக்கத்தை போக்கியவர் நீரஜ் சோப்ரா.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கத்தை வென்றார். இதனால் தங்கமகன் நீரஜ் சோப்ராவை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை நீரஜ் சோப்ரா பகிர்ந்துள்ளார்.

ALSO READ  டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதியில் சதிஷ் குமார்- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்?

அதாவது இறுதிப் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் நீரஜ் சோப்ராவின் ஈட்டியை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து நீரஜ் கூறுகையில்,

இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நான் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது நான் பயன்படுத்தவிருந்த ஈட்டி திடீரென்று காணாமல் போனது. நீண்ட நேரமாக தேடியும் கிடைக்காத சூழலில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் எனது ஈட்டியை எடுத்துக்கொண்டு சென்றதை பார்த்தேன்.

ALSO READ  இந்திய விளையாட்டு வீரர்கள் 35 பேருக்கு அர்ஜூனா விருது மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு

உடனடியாக அவரிடம் சென்று, சகோதரரே அதனை என்னிடம் கொடுத்துவிடுங்கள், அதனை வைத்து தான் நான் விளையாட வேண்டும் எனக்கேட்டு வாங்கினேன். இதன் காரணமாக தான் முதல் சுற்றுப்போட்டியில் நான் சற்று பதற்றமாக இருந்தேன் என்றார்.

பின்னர் இரண்டாவது சுற்றில் 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கத்தை வென்றார். இதே போட்டியில், பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் ஐந்தாவது இடம் பிடித்தார்.

பொதுவாக பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் தான் பால் டம்பெரிங் செய்வது வழக்கம். தற்போது ஒலிம்பிக் போட்டியில் Javelin Tampering செய்துள்ளார்கள் என்று பலரும் விமர்சித்து செய்து வருகிறார்கள்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல்

News Editor

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி49:

naveen santhakumar

Mostbet Indian: Official Site, Enrollment, Bonus 25000 Logi

Shobika