இந்தியா

கோவில் பிரச்சனைகளில் மாநில அரசு தலையிடக்கூடாது; அமித்ஷா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம் கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தை போல கேரளாவிற்கு வரும் 6 தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக உள்ளிட்ட காட்சிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 


அந்தவகையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளாவில் பிரச்சாரம் மேற்கொணடர். அப்போது அவர் கோவில் தொடர்பான பிரச்சனைகளில் அரசு தலையிடக்கூடாது என்றார். 


இது தொடர்பாக அவர் கூறுகையில்,  “சுற்றுலா மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக கேரளா கருதப்பட்ட காலம் இருந்தது. இது அதிகம் படித்த, அமைதி நேசிக்கும் மாநிலமாக அறியப்பட்டது. இப்போது இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுகள் கேரளாவை ஊழலின் மையமாக ஆக்கியுள்ள து என கூறினார்.

ALSO READ  முதல் வகுப்பு படிக்கும் ராணா சர்வதேச மாடலிங் போட்டிக்கு தேர்வு

மேலும் கோவில்கள் தொடர்பான பிரச்சினைகளில் அரசுகள் தலையிடக்கூடாது என பாஜக நம்புகிறது. அதனை, பக்தர்களிடமே விட்டுவிடவேண்டும் என்றார். போலீஸ் உடையணிந்த கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள், சபரிமலை பக்தர்களைத் தவறாக நடத்துகின்றனர் என குற்றம் சாட்டினார்.

#centralgovt #Kerala #keralaAssemblyelection #KLelection2021 #cpi #CPM #BjP #kerala #pinaryivijayan #TamilThisai #Amitshah #narendramodi


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொல்கத்தாவை விட்டு புலம்பெயர்ந்த யூதர்கள்-காரணம் என்ன?

naveen santhakumar

நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு- ஸ்மிருதி இராணி… 

naveen santhakumar

ரூ.7.4 கோடி சர்வதேச பரிசு – பாதி பணத்தை 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வழங்கும் மராட்டிய ஆசிரியர்

naveen santhakumar