இந்தியா

சாதி பாகுபாடு – தினமும் 150 கிமீ பயணித்து பாடம் நடத்தும் ஆசிரியர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாதி பாகுபாடு காரணமாக தினமும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 150 கி.மீ பயணம் செய்து பணிக்கு வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

No house for Mr Baraiya: Caste distance forces Gujarat teacher to ride  150km to school | Ahmedabad News - Times of India

குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள சுடா தாலுகா அருகே சத்திரியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹையலால் பரையா (50).

பள்ளி ஆசிரியரான இவர், அதே மாவட்டத்தில் அவருடைய சொந்த ஊரில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நினமா கிராமத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

நினமா பகுதியில் வாடகைக்கு வீடு தேடத் தொடங்கினார். கன்ஹையலால் பட்டியலினத்தை சேர்ந்த வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வீட்டு உரிமையாளர்கள் யாரும் அவருக்கு வாடகைக்கு வீடு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தினமும் 150 கிலோமீட்டர் பயணித்து பள்ளிக்கு பணிக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து சமூக நீதி மற்றும் கல்வித்துறைக்கு அவர் புகார் அனுப்பினார். ஆனால், உரிய பதில் ஏதும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவரை இடமாற்றம் செய்யுமாறு சமூக நீதித்துறை கடந்த வாரம் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.

ALSO READ  இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை? - வானிலை ஆய்வு மையம்.

இதுபற்றி கன்ஹையலால் பரையா கூறும்போது,

என் நிலைமை குறித்து முதலமைச்சர் புபேந்திர படேலுக்கும் தெரிவித்தேன். என்னை வேறு ஊருக்கு இடம்மாற்றம் செய்யுமாறு கோரியிருந்தேன். அந்த விவகாரத்தை நான் கவனித்துக்கொள்கிறேன் என்று சொன்னார்’ என்றார்.

இதனிடையே இதுபற்றி சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, தற்போது விடுமுறையில் இருப்பதாகவும் இந்த விஷயம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ  படகில் கட்டிவைத்து நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற சிறுவர்கள்

சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவது இங்கு சகஜம்தான். இதில் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

மேலும், ஜனவரி 26, 2022க்குள் நாட்டில் எந்த ஒரு கிராமத்தையும் பாகுபாடு இல்லாத கிராமமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். குஜராத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எல்லா இடங்களிலும் தினமும் நடக்கின்றன என்று தலித் உரிமை ஆர்வலர் காந்திலால் பர்மர் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆடைகளை கழட்டி மாதவிடாய் சோதனை.. பெண்கள் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்..

naveen santhakumar

234 தொகுதியிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களில் இ-சேவை மையங்கள்!

Shanthi

ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி

Admin