இந்தியா

21 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அடுத்த 48 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள்  மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கரூர், நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,

அதில் கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்,24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும்.

ALSO READ  Glory Casino Online ️ Play on official site in Banglades

அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஹோலி கொண்டாட்டம் விமர்சையாக நடைபெற்றது…..

naveen santhakumar

ராஷ்டிரபதி பவனில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளுக்கு குடியரசு தலைவர் உத்தரவு.. 

naveen santhakumar

அமைச்சர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் – நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்க வேண்டும் -சுப்பிரமணிய சுவாமி அதிரடி…

naveen santhakumar