இந்தியா உலகம் மருத்துவம் லைஃப் ஸ்டைல்

உங்களுக்கு மன சோர்வு இருக்கா? இத படிங்க

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்த உலகத்துல மன சோர்வு (Stress) தாண்டாம யாருமே வந்தது இல்ல.இந்த depression வர வயது வரம்பு இல்லை.யாருக்கு வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் வரலாம்.Depression க்கு நிறைய காரணங்கள் உண்டு.நம்ம மூளை ஒழுங்கா செயல்பட மூளையில் (தெளிவா சொல்லணும்னா PITUITARY&HYPOTHALAMUS ல) இருந்து சில Neurotransmitters சுரக்கும்…. GABA,GLUTAMATE,SERETONIN அப்டின்னு சில…. இது எல்லாமே தராசுல வெச்ச மாதிரி சரியான சதவிகிதம்ல இருக்கிறதால தான் நம்மல மூளை ஒரு நிதான நிலைல(EQUILLIBRIUM) வெச்சுக்குது. எது சரி…எது தப்புன்னு யோசிக்குற பக்குவம் வர்றது இந்த Neurotransmitters மூலமா தான்! இதுக்கு பேர் INSIGHT…. இதுல கொஞ்சம் மாறுதல் ஆனாலும் மூளை தாறுமாறா செயல்பட ஆரம்பிச்சிடும். அது நாளடைவில் பல முகம் கொண்டு Depression க்கு கொண்டு போய் விடும். இதுக்கு பேர் CLINICAL DEPRESSION. சிலருக்கு INSIGHT பாதிக்க படும்.

உங்க கிட்ட யாராச்சு மன அழுத்தம்னு வந்து நின்னா, அவங்கள டாக்டர் கிட்ட கொண்டு வந்து சேர்க்க போற இணைப்பு பாலமே (Connecting Bridge) நீங்க தான்!!! உங்களோட பங்கு இங்க ரொம்ப முக்கியம். Depression ல இருக்கவங்க கிட்ட நீங்க சாதாரணமா போய்ட்டு வா, டாக்டர் கிட்ட போகலாம் னு சொன்னா, கண்டிப்பா வர மாட்டாங்க. நான் என்ன லூசா ன்னு நம்ம மேல கோவப்படுவாங்க. அது ஒரு குழந்தை மன நிலை. அதை முதல்ல உள்வாங்கி அதை புரிஞ்சிக்கிற மக்களால் மட்டும் தான் ஒரு நல்ல பாலமா இருக்க முடியும்.தயவு செஞ்சு நீங்களா ஒரு முடிவு குடுக்காதீங்க.

இத பண்ணு, சரி ஆயிடும்!ஒரு நல்ல பிரியாணி சாப்பிடு சரி ஆயிடும் னு சொல்லாதீங்க! தயவு செஞ்சு அதை அங்கீகாரம் செஞ்சு பழகுங்க… பல யோசனைக்கு பின்னாடி தான் உங்க கிட்ட அழுத்தமா இருக்கவங்க பேசவே வந்திருப்பாங்க!உங்களோட சொந்த விருப்ப அவங்க கிட்ட சொல்லி… அவங்கள தப்பா வழி நடந்துறது தப்பு. யாருக்காச்சு Genetic Disorder (க்ரோமோசோம் குறைபாடு) இருந்தா அது சில வயசுல தான் வெளிப்படவே ஆரம்பிக்கும்.அதனால தான் சொன்னேன்,சைக்காட்ரிஸ்ட் தவிர வேற யாராலும் இதை அவ்ளோ Perfect ஆ கண்டுபுடிச்சு தீர்வு குடுக்க முடியாதுன்னு.

ALSO READ  இங்கிலாந்தில் 12-15 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி...

ரெண்டாவது அவங்களுக்கு நீங்க எப்பவுமே இது ஒரு சின்ன பிரச்சினை… இதெல்லாம் ஒரு பிரச்சனையா… நான் எல்லாம் எவ்ளோவோ பாத்திருக்கேன்னு உங்க சுய வாழ்க்கையில நடந்த விஷயங்களை சொல்லி, உங்க சுய பெருமைக்காக தம்பட்டம் தட்டி, நமக்கு மன அழுத்தம் உண்டுன்னு உணர்ந்து வந்த அவங்கள, நமக்கு எதுவுமே பிரச்சனை இல்லை, நாம தான் ரொம்ப யோசிக்கிறோம்னு அவங்கள கடிவாளம் போட்டுக்க விடாதீங்க. நீங்க தான் அந்த பாலம்னு சொன்னேன். சோ, உங்களோட பங்கு அவ்ளோ முக்கியம்.

மூணாவது தயவு பண்ணி… அவங்களோட அப்பாவோ இல்ல அம்மாவோ இல்ல அவங்க யாரோட தங்கி இருக்காங்களோ, அவங்க கிட்ட இத மன அழுத்தம் இருக்க நபருக்கு தெரியாம தெரியப்படுத்துங்க…. ஏன்னா, மன அழுத்தம் ஒரு Emergency இல்ல. யாருமே மன அழுத்தம் வந்த முதல் நாளே டாக்டர் கிட்ட போக மாட்டாங்க. அவங்க மன நிலை எப்டி வேணும்னாலும் இருக்கலாம். பல நாள் மன அழுத்தம், தற்கொலை எண்ணமா மாறும். எனவே அவங்கள டாக்டர் உதவி கிடைக்கிற வரைக்கும் பத்திரமா பாத்துக்கணும்.

ALSO READ  ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெற்றாலே போதும்:

அதே மாதிரி நம்ம நிறைய பேர் கிட்ட இருக்க முக்கியமான பிரச்சனை…. நம்ம அழுத்தமா இருக்க காரணம் இது தான்னு தெரிஞ்சும்… அத விட்டு விலகி வராம இருக்கிறது….Toxic relationship ல இது ரொம்ப இருக்கு…. என்ன ஆனாலும் அவன்/அவள் விட்டு நான் விலக மாட்டேன் னு நெனச்சு…. மறுபடி மறுபடி அந்த குழியயே நாம தேடி விழுவோம்…. அந்த தப்ப பண்ணாதிங்க….. நாம தன்னிலை உணர தவறி போறது தான் முக்கால்வாசி அழுத்தத்தை குடுக்குது…. தயவு செஞ்சு அது வேணாம்…. உங்களோட சந்தோசம் உங்க கிட்ட தான் இருக்கு…. அத மத்தவங்க கிட்ட தேடாதீங்க….


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவின் அனைத்து வெர்ஷன்களையும் ஓடஓட விரட்டும் ‘சூப்பர் வேக்சின்’ :

Shobika

புகழ்பெற்ற மதுரை மல்லிகைப் பூ-விற்கு புவிசார் குறியீடு

naveen santhakumar

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை !

News Editor