இந்தியா

ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவைக்கு குவியும் பாராட்டு….அப்படி அந்த நிர்வாகம் செய்தது என்ன????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:

பிரசவ வலியால் துடித்த நிறை மாத கர்ப்பிணியை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, ஒருவருக்காக மட்டும் சிறப்பு ரயிலை இயக்கிய ஹைதராபாத் ‘மெட்ரோ’ ரயில் நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில், கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் கன மழை பெய்தது. இதில் அந்த நகரமே வெள்ளக்காடாக மாறியதால், சாலை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்ததுப் போனது. இந்நிலையில், கடந்த 14ம் தேதியன்று இரவு,சரியாக 10 மணிக்கு கர்ப்பிணி ஒருவர், விக்டோரியா மெமோரியல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தார். பிரசவ வலியால் துடித்த அவர், அங்கிருந்த ஊழியர்களிடம், மியாபூர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றார். 

ALSO READ  டெல்லியில் போராட்டக் களத்தில் குவிந்த ஆணுறைகள்.. உண்மையா இல்ல வதந்தியா ?

வழக்கமாக இரவு, 9 மணியுடன், மெட்ரோ ரயில் சேவை முடிவடையும்.கர்ப்பிணியின் நிலையை கருத்தில் கொண்டு உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, அந்த பிரசவ வலியால் துடித்த பெண்மணி ஒருவருக்காக மட்டும், சிறப்பு ரயிலை மெட்ரோ நிர்வாகம் இயக்கியது.இந்த செயல், பல்வேறு தரப்பிலுமிருந்து பாராட்டுகளை குவிந்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வறுமை ஒரு தடையல்ல – ஆச்சரியமூட்டும் தம்பதி – டீக்கடை வருமானத்தில் 25 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்!

News Editor

66வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா:மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான விருது

Admin

Програміст Php: Все Про Професію Від Навичок До Зарплати

Shobika