இந்தியா

இந்தியாவிற்கு விரைவில் 33 போர் விமானங்களை வழங்குகிறது ரஷ்யா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்கோ:-

இந்தியா-சீனா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள சூழலில் இந்தியாவுக்கு சுகோய், சு 30 எம்.கே.ஐ. மிக்யோன் குயரெவிச் மிக் 29 போன்ற போர் விமானங்களை விரைவில் வழங்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவை விரைவில் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலையடுத்து இந்தியா -ரஷ்யா இடையிலான விமான பேர ஒப்பந்தத்தின் படி 33 போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன. இதன் மதிப்பு 6000 கோடி என்று கூறப்படுகிறது.

ALSO READ  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று ! 

இதில் 12 சுகோய் விமானங்களும் 21 மிக் 29 விமானங்களும் அடங்கும். விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சுகோய் ரக விமானங்களை இந்திய விமானப்படை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளது. சீன துருப்புகளின் ஒவ்வொரு நடமாட்டத்தையும் தற்பொழுது இந்திய வான்படை கண்காணித்து வருகிறது.

ALSO READ  ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் அறிமுகம் :


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை – வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

News Editor

Pin Up Casino rəsmi saytı slot maşınlar

Shobika

1XBET Azerbaycan İdman üzrə onlayn mərclər ᐉ Bukmeker şirkəti 1xBet giriş ᐉ aze 1xbet c

Shobika