இந்தியா

இணையத்தில் வைரலாகும் தொடர்ந்து 10 மணி நேரம் கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவரின் கை புகைப்படம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராய்பூர்:-

சுமார் 10 மணி நேரம் பணியாற்றிய பிறகு கையுறைகளை அகற்றிய மருத்துவரின் சுருங்கிய கையின் புகைப்படத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களுக்காக முன்கள பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள் என இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ALSO READ  இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் டிசம்பருக்குள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்-NIMHANS..

இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் கபிர்தம் (Kabirdham) மாவட்ட ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன், 10 மணி நேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தனது PPE உடை மற்றும் கையுறைகளை அகற்றிய பின்னர் அவரது கையின் புகைப்படத்தை டவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படத்தில் காணப்படுவது தொடர்ந்து பத்து மணி நேரம் பாதுகாப்பு உடை மற்றும் கையுறைகள் அணிந்து பணியாற்றிய மருத்துவரின் கை. அனைத்து முன்களபணியாளையும் அவர்களின் பணிக்காக வணங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  ஆத்தூரில் காவல் ஆய்வாளர் உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று !

இந்த புகைப்படத்தில் மருத்துவரின் கை சுருக்கமாக இருப்பதை காணமுடிகிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சட்டீஸ்கரில் 100 கிலோ மாட்டுச்சாணம் திருட்டு… 

naveen santhakumar

PINUP-AZ Online Casino Pin U

Shobika

лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

Shobika