இந்தியா

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

பிரிட்டனிலிருந்து வந்தவர்களில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான்     மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்த நிலையில் தான் பிரிட்டனில் தற்போது பரவி வருகிறது புது வகையான கொரோனா  வைரஸ்.

பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் அதிகம் பரவிவருவதால் மத்திய அரசு பிரிட்டன் விமான சேவைக்கு தடை விதித்துள்ளது.

ALSO READ  "22 ஆம் தேதி யாரும் வெளியே வர வேண்டாம்"- பிரதமர் மோடி உரையின் சிறப்பம்சங்கள்…...

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில்  மேலும் 5 பேருக்கு உருமாறிய கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேருக்கு ஏற்கனவே உருமாறிய கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

புனே ஆய்வகத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் மேலும் 4 பேருக்கும், டெல்லி ஆய்வகத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் ஒருவருக்கும் உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 25 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.’ இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ALSO READ  டெல்லி ஐஐடி உருவாக்கிய கொரோனா PCR கருவிக்கு -ICMR அனுமதி....

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீதிபதி முரளிதரும் அவரது அதிரடி தீர்ப்புகளும்..!!!!

naveen santhakumar

ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு கொடூர சம்பவம்:

naveen santhakumar

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி !

News Editor