இந்தியா

கொரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை-முப்படைத் தளபதி பிபின் ராவத்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


டெல்லி:-

கொரோனா தொற்று தீவிரத்தையடுத்து முப்படைகளில் தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையில் முப்படைகளின் தளபதிகள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப்பின் பிபின் ராவத் உள்பட முப்படைகளின் தளபதிகள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவை எதிர்கொள்ள இனி வரும் நாட்களில் அரசோடு இணைந்து முப்படைகளும் தங்கள் கடைமையை மேற்கொள்ளும்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோரை கௌரவிக்கும் வகையில் இராணுவத்தின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ  ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல்

இந்திய கப்பல் படைக்கு சொந்தமான கப்பல்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் அணிவகுப்பில் ஈடுபடும்.

அதில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கொண்டு மருத்துவமனைகள் மீது மலர் தூவி மரியாதை செலுத்தும். 

இந்த ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மே 3ஆம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானங்கள் பறக்கும்.

ALSO READ  கொரோனா களப் பணியாளர்களுக்கு முப்படைகளின் மரியாதை...

மேலும் ராணுவத்தின் சார்பில் அணிவகுப்பு மரியாதை மற்றும் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சியும் நடத்தப்படும்.

தரைப்படையின் வழியாக நாங்கள் துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவர்கள், போலீஸ்காரர்கள், பாதுகாப்பு வீரர்கள், ஊடகத்தினர், வீடுகளுக்குச் சென்று உணவு, அத்தியாவசிய பொருட்களை டெலிவெரி செய்பவர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி செலுத்துகிறோம். 

அதே நேரத்தில் அனைவருக்கும் கடினமான காலங்களில் உயிரை தற்காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தும் மாநில அரசு !

News Editor

Azerbaycanda etibarlı bukmeker kontor

Shobika

Mostbet Tr Resmî Web Sitesinde Giriş Ve Kayıt Olm

Shobika