இந்தியா சுற்றுலா

இந்தியாவின் கடைசி கிராமம்-மனா.. என்ன ஸ்பெஷல்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பத்ரிநாத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரமுள்ள மனா கிராமம்தான் இந்தியாவின் கடைசி கிராமம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்க செல்ல ஏராளமான தனியார் வாகனங்கள் உள்ளன.சீன ஆக்கிரமிப்பு தேசமான திபத்தை ஒட்டி இந்த கிராமம் இருப்பதால் இராணுவ முகாம்களை ஆங்காங்கே காணமுடியும்.

தனியார் வாகனம் கிராமத்தின் நுழைவாயில் வரைத்தான் செல்லும.. கிராமம் என்றால் அப்பட்டமான கிராமம் அது. திபத்தியர்களும், இந்தியர்களும் இணைந்தே வாழ்கிறார்கள். கற்களால் அடுக்கி கட்டப்பட்ட குட்டி,குட்டி வீடுகளில் திபத்திய கொடிகள் பறந்து கொண்டிருந்தது.

ALSO READ  ஒமைக்ரான் தொற்றில் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

உருளைக்கிழங்கு விவசாயமும்,ஸ்வட்டர் பின்னுதலும்,கால்நடைகள் மேய்ப்பதும் தான் இந்த கிராமத்தின் பிரதான தொழிலாய் இருக்கிறது. வியாச முனிவர் தவம் செய்த குகையும் அருகிலேயே ஒரு விநாயகர் கோவிலும் இருந்தது. வியாச மகரிஷி சொல்ல சொல்ல…. விநாயகர் மகாபாரதத்தை இங்குதான் எழுதினார் என்பது திபெத்திய மக்களின் நம்பிக்கை.

இதமான குளிரும், பச்சையும்,பனியும் போர்த்திய மலைகளும் மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும். திரிவேணி சங்கமம் எனப்படும் கங்கா,யமுனா,சரஸ்வதி நதிகளில் சரஸ்வதி நதி மட்டும் கண்ணுக்கு புலப்படுவது இல்லை என்பார்கள்.

ALSO READ  1win Official Site Betting And Casinos In Of India 202

ஆனால் மனா கிராமத்தில் பாறைகளின் மத்தியிலிருந்து பாயும் அருவி ஒன்று பாய்ந்து பள்ளத்தாக்கில் மறைந்து போகிறது. அங்குள்ளவர்வர்கள் இதுதான் சரஸ்வதி நதி என்றும் இது பள்ளத்தாக்கில் எங்கு போய் சேருகிறது என்று எவருக்கும் இதுவரை அறிந்திருக்கவில்லை என்கிறார்கள்.

பள்ளத்தாக்கு வழியாக பாயும் சரஸ்வதி நதி அலக்நந்தாவில் கலந்து கங்கையோடு இணைகிறதாம். நேரம் இருப்பின் இந்த கிராமத்திற்கு சென்று வாருங்கள்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பச்சை மண்டலத்தில் அனுமதிக்கப்பட்டவை மற்றும் பற்றிய மண்டலத்தில் அனுமதிக்கப்படாதவை..

naveen santhakumar

டைப்ரைட்டரில் ராமர் ஓவியம் வரைந்து அசத்திய ஓவியர்… 

naveen santhakumar

நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து..

Shanthi