இந்தியா

இந்தியாவில் தயாராகும் மிகக் குறைந்த விலை வெண்டிலேட்டர்கள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது இதனால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெண்டிலேட்டர் தேவையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய அரசாங்கம் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் வெண்டிலேட்டர்களை உற்பத்தி செய்யக்  கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ரோபட் விஞ்ஞானி திவாகர் வைஷ் மற்றும் நரம்பியல் நிபுணர் தீபக் அகர்வால் இருவரும் இணைந்து சிறிய ரக வெண்டிலேட்டரை தயாரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உடலில் நுரையீரல் பாகத்தை பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வேண்டியுள்ளது.

ALSO READ  சமையல் எரிவாயு விலை திடீரென உயர்வு :

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகள் எண்ணிக்கையால் வெண்டிலேட்டர் பற்றாக்குறை நிலவுகிறது.

இதைத்தொடர்ந்து AgVa நிறுவனம் இந்த போர்ட்டபில் வெண்டிலேட்டர்களை உற்பத்தி செய்துள்ளது. தற்போது 20,000 வெண்டிலேட்டர்களை உற்பத்தி செய்துள்ளது. தற்போதைய ஒரு வெண்டிலேட்டர் விலை கிட்டத்தட்ட 10,000 டாலருக்கும் மேல். இந்த AgVa வென்டிலேட்டர் ஒன்றின் விலை வெறும் 2,000 டாலர்கள் தான்.

இதன் எடை வெறும் 3.5 கிலோ கிராம் தான். மேலும் மருத்துவமனை தவிர்த்து வேறு ஏதும் இடங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மற்றும் பட்சத்தில் இந்த வெண்டிலேட்டர் உதவியோடு நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கலாம்.

ALSO READ  ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா?

இந்திய மருத்துவ அசோசியேஷன் தலைவர் அசோகன் கூறுகையில்:-

இந்த AgVa வெண்டிலேட்டர்கள் உண்மையில் மிகவும் உன்னதமான கண்டுபிடிப்புகள் பாராட்டியுள்ளார். ஐசியு-வில் அதிக கட்டணத்தில் மருத்துவம் பார்க்க இயலாத ஏழைகளுக்கு இந்த போர்ட்டபிள் வெண்டிலேட்டர் மூலம் மிக குறைந்த விலையில் சிகிச்சை பெறுவார்கள் என்றார்.

இந்தியாவில் தற்போது கோரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து சில மருந்துகள் மற்றும் வெண்டிலட்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தற்காலிக தடை விதித்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஊடகங்கள் பங்கு முக்கியமானது சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் பாராட்டு

News Editor

மொழி கற்றல் செயலியையே Tinder App ஆக பயன்படுத்தி இளைஞர் திருமணம்….

naveen santhakumar

15 ஆண்டு பழைய வாகனங்கள் இயக்க ஏப்ரல் 2022 முதல் தடை

News Editor