இந்தியா சுற்றுலா

சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண ரயில்வேத்துறை சுற்றுலா ரயில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

மதுரைமாநகரிலிருந்து இந்திய ரயிவே துறை சார்பில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் வரும் 29ஆம் தேதி மதுரைமாநகரிலிருந்து புறப்படுகிறது.

இந்த ரயில் திண்டுக்கல் கரூர் சேலம் வழியாக சென்னை வந்து சேர்கிறது. தொடர்ந்து ஹைதராபாத் ஜெய்பூர் உதய்பூர் வழியாக குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ரயில் நிலையம் சென்று அங்குள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை காணும் வகையில் இந்த ரயில் சுற்றுலா அமைக்கப்பட்டுள்ளது

ALSO READ  பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் தமிழக பெண்..!!!
Indian Railways to launch special train to Statue of Unity - how to book on  IRCTC

பொதுவாக ஆன்மீக சுற்றுலாக்கள் ரயில்வே துறையில் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது முதல்முறையாக அருங்காட்சியங்கள் கோட்டை வரலாற்று நிகழ்வுகளை கண்டுகளிக்கும் வகையிலும் புராதான ஏரி மற்றும் கடல் கோயில் போன்றவற்றையும் காணும் வகையில் இந்தச் சுற்றுலா ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா பயணம் 12 நாட்கள் கொண்டதாகும். இச்சுற்றுலா ரயிலுக்கான ஒருவருக்கான கட்டணம் 16340 ஆகும். இக் கட்டணம் உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்டதாகும் இதற்கான முன்பதிவு ஐ ஆர் டி சி தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜம்மு-காஷ்மீரின் முதல் IAS அதிகாரி பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது.

naveen santhakumar

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் – பேருந்துகள் ஓடவில்லை ..!

News Editor

மந்தார்மணி கடற்கரையில் கரை ஒதுங்கிய 36 அடி நீல திமிங்கலம்… 

naveen santhakumar