இந்தியா

ஸ்மார்ட் சிட்டி திட்டம் 6 ஆண்டுகள் கழிந்தும் 47% மட்டுமே நிறைவடைந்துள்ளது ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி:

ஒன்றிய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உள்ள 100 நகரங்களை நவீனப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட நகரங்களில் இதுவரை 47% அளவில் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பது தனியார் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ALSO READ  தீபாவளி - பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு…மீறினால் நடவடிக்கை…!
Tamil Nadu: With workers gone, Rs 11,000 crore smart city projects stuck |  Chennai News - Times of India

இதில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் மட்டுமே சிறப்பாக செயலாற்றி வருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் போபால், இந்தூர், உஜ்ஜயின் நகரங்களிலும் குஜராத்தில் ராஜ்கோட், சூரத் ஆகிய நகரங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனியார் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

ALSO READ  சென்னையில் முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயம்- மாநகராட்சி....

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் பெரும்பாலான மாநிலங்களில் முடங்கி இருப்பதற்கு கொரோனா பெருந்தொற்று காரணமே கூறப்படுகிறது.சில மாநிலங்களில் நிதி பற்றாக்குறை எதிரொலியாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மே மத்தியில் இந்தியாவில் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிர் இழக்கலாம்- அதிர்ச்சி ரிப்போர்ட்

naveen santhakumar

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.. 

naveen santhakumar

CAA-விற்கு எதிரான வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை

Admin