இந்தியா

இதில்….இந்த மாநிலத்திற்கு தான் முதலிடமாம்….மத்திய அரசு அதிரடி…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.

பல்வேறு கட்டங்களாக தடு்ப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

இவ்வாறு பெறப்படும் தடுப்பூசிகளை மாநிலங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் மக்களுக்கு பயன்படுத்தி வருகின்றன.

எனினும் பல மாநிலங்களில் தடுப்பூசி டோஸ்கள் அதிக அளவில் வீணாவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இது மத்திய அரசுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

ALSO READ  இன்றும் முதல் "ஜக்கா ஜாம்" போராட்டம் விவசாயிகள் அறிவிப்பு !

இந்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி டோஸ்களை வீணாக்கும் மாநிலமாக ஜார்கண்ட் மாநிலம் அறியப்பட்டு உள்ளது. அங்கு 33.95 சதவீத தடுப்பூசி டோஸ்கள் வீணாகி இருப்பதாக அரசு கூறியுள்ளது.

இதைப்போல சத்தீஸ்கார் 15.79 சதவீதம், மத்திய பிரதேசம் 7.35 சதவீத டோஸ்களை வீணாக்கியுள்ளன. பஞ்சாப் (7.08), டெல்லி (3.95), ராஜஸ்தான் (3.91), உத்தரபிரதேசம் (3.78), குஜராத் (3.63), மராட்டியம் (3.59) போன்ற மாநிலங்களும் தடுப்பூசி டோஸ்களை வீணாக்கி இருக்கின்றன.

இப்படி பல மாநிலங்கள் தடுப்பூசியை வீணாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்கள் ஒரு டோசையும் வீணாக்காமல், வீணாகும் டோஸ்களாக கணக்கிடப்படும் தடுப்பூசியை கூட போட்டு சாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ  வருமான வரியை தவறாமல் ஒழுங்காக செலுத்துபவர்களா நீங்கள்??? அப்போ இந்த ஜாக்பாட் உங்களுக்குத்தான்:

அந்தவகையில் கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்கள் எந்தவித வீணாக்கலும் இல்லாமல் தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை 19 சதவீதத்தினரே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அதேநேரம் ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 24 சதவீதமும், பீகாரில் 25 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா மூன்றாம் அலை: குழந்தைகளுக்கான தடுப்பூசி ஒரு பார்வை…! 

naveen santhakumar

ஐம்பதாயிரம் ரூபாய் நிதி திரட்டி போலிஸாருக்கு அளித்த 3 வயது சிறுவன் எவ்வாறு சாதித்தான் இதை ??..

naveen santhakumar

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் திடீரென புகுந்த மழை நீர்- வைரல் வீடியோ… 

naveen santhakumar