இந்தியா

தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவையா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாடு முழுவதும் டிசம்பர் 2023க்குள் ஜியோ 5ஜி சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை தீபாவளிக்குள் ஜியோ அறிமுகப்படுத்த உள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார்.

ஜியோ 5ஜி சேவை தீபாவளிக்குள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நாடு முழுவதும் டிசம்பர் 2023க்குள், 18 மாதங்களில் ஜியோ 5ஜி சேவை மற்ற மாநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் இன்று நடைபெற்ற நிறுவனத்தின் 45வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி பங்குதாரர்களிடம் பேசினார்.

மேலும் ஜியோ 5ஜி சேவை குறித்து முகேஷ் அம்பானி பேசியதாவது, இது உலகின் அதிநவீன 5ஜி ஆகும். ஜியோவின் லட்சிய திட்டமான 5ஜி வெளியீடு திட்டம் உலகிலேயே மிக வேகமாக இருக்கும் என்றும் ஜியோ தனது 5ஜி நெட்வொர்க் வரிசைப்படுத்தலுக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.

ALSO READ  இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் ஹைப்ரிட் ஸ்கூட்டர் :

ஜியோ தனது 5ஜி சேவையை ஆதரிக்க அனைத்து ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜியோவின் 5ஜி நெட்வொர்க் அனைவரையும், ஒவ்வொரு இடத்தையும், மிக உயர்ந்த தரம் மற்றும் மிகவும் மலிவு டேட்டாவுடன் இணைக்கும் என்று அம்பானி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் இன்டெல் ஆகியவை ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்… 

naveen santhakumar

வன்முறையில் முடிந்த ட்ராக்டர் பேரணி; உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் !

News Editor

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று உலக சாதனை

News Editor