இந்தியா

தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக நீதிபதி சந்திரசூட் நியமனம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பெயரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவராக ஜனாதிபதி திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளதையடுத்து இதுகுறித்த அறிவிப்பு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக தற்போதுள்ள தலைமை நீதிபதி யு.யு.லலித் இருந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். மேலும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் சமீபத்தில் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  ஊடக செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி ரமணா வருத்தம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்….

naveen santhakumar

மத்திய பிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்- 3 பேர் பலி

naveen santhakumar

வரும் 21ம் தேதி முடிய இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 வரையில் முன்பதிவு ரத்து: ரயில்வே அறிவிப்பு

News Editor