இந்தியா

போக்சோ தீர்ப்பின் விளைவு; நிரந்தர நீதிபதி பதவியை பறிகொடுத்த புஷ்பா..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கானோதிவாலா, பல பாலியல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி பெரும் சர்ச்சையை கிளப்பியவர். அந்த வகையில் இவர் அண்மையில் ஒரு பாலியல் வழக்கிற்கு கொடுத்த தீர்ப்பு இந்திய முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என தீர்ப்பளித்தார். மேலும், ‘உடலுறவு கொள்வதை தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் அத்துமீறலாகும்’ எனக் கூறி குற்றவாளிக்கும் தண்டனையையும் குறைத்தார். இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இதுகுறித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இது அவருக்கு புதிதல்ல இப்படி பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார் நீதிபதி புஷ்பா.  உச்சநீதிமன்ற கொலிஜியம் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என  தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் அந்தப் பரிந்துரையை திரும்பப் பெற்றுள்ளது.

ALSO READ  தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை; அதிதீவிர புயலாக மாறிய யாஷ் !

இந்நிலையில், புஷ்பா கெனாடிவாலாவின் பதவிக் காலம் நேற்றோடு முடிவடைந்ததை தொடர்ந்து அவர் நிரந்தர நீதிபதியாக மாற்றப்படாமல் மேலும் ஓராண்டு காலம் கூடுதல் நீதிபதியாகவே தொடர்வார் என  மத்திய சட்ட அமைச்சகம்  தெரிவித்துள்ளது. புஷ்பா கெனாடிவாலாவை இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதியாகவே தொடர வேண்டும் என்று  உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில்  ஓராண்டு மட்டும் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azərbaycanda onlayn kazino Pin Up Pin Up slot maşınlar

Shobika

புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் 75 வது சுதந்திரதின கொடியேற்றினார்கள்

News Editor

20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியது வாட்ஸ்அப்

naveen santhakumar