இந்தியா

பணத்திற்காக நண்பனை கடத்தி கொலை செய்த இளைஞர்… SP உட்பட 11 போலீஸார் சஸ்பெண்ட்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கான்பூர்:-

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் நண்பனே பணத்துக்காக கடத்திச் சென்று 29 வயது இளைஞரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் அருகே பர்ரா (Barra) பகுதியைச் சேர்ந்த சஞ்சீத் யாதவ் (28) லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மற்றொரு நண்பர் பெண்மணி உட்பட ஐந்து பேருடன் இணைந்து பணத்திற்காக அவரை கடத்தி உள்ளனர். கடந்த ஜூலை 22ம் தேதி அவர்கள் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது அவர்கள் இணைந்து சஞ்சீத்தை கொலை செய்தனர்.

Sanjeet Yadav.

சஞ்சீத்தின் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு ஆற்றங்கரையில் வீசிய கொலையாளிகள், கொலை செய்த பிறகும் கூட சஞ்சீத்தின் குடும்பத்தினரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.

பின்னர் குடும்பத்தினர் 30 லட்சம் ரூபாய் தருவதாக கூறியது எடுத்து ஒப்புக்கொண்ட கொலையாளிகள் குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி கூறினார்கள். ஜூலை 13ம் தேதி அவர்கள் சொன்ன இடத்திற்கு பணத்தோடு சஞ்சித் குடும்பத்தினர் வந்தனர் அவர்களை பிடிப்பதற்காக போலீசார் காத்திருந்தனர்.

ALSO READ  கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்
Sanjeet Family.

அப்போது போலீசாரை விடவும் புத்திசாலித்தனமாக செயல்பட்ட கொலையாளிகள் பாலம் ஒன்றின் மேலே இருந்து பணத்தை கீழே தூக்கிப் போட சொல்லி அவற்றை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். கொலையாளிகளை பிடிப்பதை போலீசார் கோட்டைவிட்டதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து கவனக்குறைவால் குற்றவாளிகளை தப்பவிட்டது தொடர்பாக கான்பூர் தெற்கு எஸ்பி அபர்ணா குப்தா, டிஎஸ்பி மனோஜ்குமார், பர்ரா காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் ரஞ்சித் ராய், அவுட் போஸ்ட் இன்சார்ஜ் ராஜேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் யோகேந்திர பிரதாப் சிங், மற்றும் 6 கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ALSO READ  இந்தியாவிலேயே நீளமான முடி இவங்களுக்கு தான்.. என்ன Oil Use பண்றாங்க தெரியுமா?

இதனைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் குற்றவாளிகள் 6 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக கான்பூர் ஐஜி மோகித் அகர்வால் (Mohit Agarwal) கூறுகையில்:-

ஞானேந்திரன் யாதவ் என்கிற ஐஷூ, குல்தீப் கோஸ்வாமி, நீலு சிங், ராம்ஜி சுக்லா, மற்றும் ப்ரீத்தி ஷர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மற்றொரு நபரான சிம்மி சிங் (Simmy Singh) என்பவன் ஓடிவிட்டான். சிம்மி சிங்கை தேடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஐஷூ என்பவன் கொலை செய்யப்பட்ட சஞ்சீத்தின் நெருங்கிய நண்பன் ஆவன். இவன் தான் இந்த கடத்தல் மற்றும் கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“gerçek Parayla En Iyi Slot Makineleri Empieza Spor Bahisleri

Shobika

அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஹோலி கொண்டாட்டம் விமர்சையாக நடைபெற்றது…..

naveen santhakumar

ராஜஸ்தானில் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 3 முதியவர்கள்.. பயன்படுத்திய மருந்துகள் என்ன??மருத்துவர்களுக்கு முதல்வர் பாராட்டு….

naveen santhakumar