இந்தியா

கன்னியாகுமரியில் கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கின்றன. இங்கு கடந்த 2 நாட்களாக கடலின் தன்மை மாற்றம் அடைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீர் என உள்வாங்க தொடங்கியது. இரவு முழுவதும் கடல் உள்வாங்கிய படியே இருந்தது. விடிந்த பிறகுதான் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்பு நேற்று பகல் முழுவதும் கடல் இயல்பாக காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு கடல் 2-வது நாளாக மீண்டும் உள்வாங்க தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கடல் நீர் சுமார் 50 அடி தூரத்துக்கு உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த ராட்சத பாறைகள், மணல் திட்டுகள், மணல் பரப்புகள் வெளியே தெரிய தொடங்கின. அத்துடன் கடலுக்குள் இருந்த விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைகள் திடல் போல் காட்சியளித்தது. இதை பார்த்த மீனவர்கள் ஒருவித அச்சத்துடனும், பீதியுடனும் காணப்பட்டனர். விடிய விடிய அதே நிலைமை நீடித்தது.

ALSO READ  ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மாயம் !

இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கன்னியாகுமரி கடல் இதுபோல் தான் உள்வாங்கியது. தற்போதும் அதே போல் கடல் உள்வாங்கியதால் கடற்கரையோர மக்கள் பீதி அடைந்தனர். இதனால், அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய, விடிய விழித்திருந்தனர். 

பொதுவாக கன்னியாகுமரி கடல் அடிக்கடி பகல் நேரங்களில் மட்டுமே எப்போதாவது சில அடிதூரம் மட்டுமே உள்வாங்கி வந்தது. தற்போது கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கடல் உள்வாங்கும் சம்பவம் நடைபெறுவது, மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று..!

இதுகுறித்து ஜோதிட நிபுணர்கள் கூறும்போது, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் கடலில் இதுபோன்று சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. அது பகல், இரவு என்று இல்லாமல் எந்த நேரத்தில்  வேண்டுமானாலும் நிகழலாம் என்று கூறினர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரியானாவில் பஸ் மீது லாரி மோதி பயங்கர விபத்து..

Shanthi

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

News Editor

வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. நடந்தது என்ன?

Shanthi