இந்தியா

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று; முழு ஊரடங்கை அறிவித்த மாநில அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில்  நாளுக்கு  நாள் அதிகரித்து  வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றனர். 

டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கேரளா மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுதப்பட்டுள்ளது.

ALSO READ  "mostbet Kz Официальный Сайт: Казино И Букмекерская Контор

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “கேரளா கடுமையான சூழ்நிலையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா உறுதியாகும் சதவீதம் குறையவில்லை. இந்தச் சூழ்நிலையால் மாநிலத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் 8 ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து மே மாதம் 16  தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தார்.

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் : மத்திய அரசு அதிரடி 

News Editor

விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யக்கோரி வழக்கு:

naveen santhakumar

6 மாத மகப்பேறு விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீ ஜனா….

naveen santhakumar