இந்தியா

“ஏ.ராஜா ஆகிய நான்” தமிழ் மொழியில் பதவியேற்றுக்கொண்ட கேரள எம்.எல்.ஏ ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தை போலவே  கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதில் கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம்  கேரளாவில் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி கேரளா மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து, இன்று கேரளாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், கேரள சட்டசபையில் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வெற்றி பெற்ற ஏ.ராஜா என்ற சட்டமன்ற உறுப்பினர் “ஏ. ராஜா ஆகிய நான்” எனக் கூறி தனது தாய்மொழி தமிழில் பதவியேற்றுக்கொண்டார். 

ALSO READ  ஸ்ரீரங்கம் ஜீயர் தேர்வு நியமனம் குறித்து அமைச்சர் கருத்து !

ஏ.ராஜா தமிழக எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் என்ற சட்டமன்றத் தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட ஏ.ராஜா தேவிகுளம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet AZ 90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika

அமெரிக்காவாக மாறும் இந்தியா … திரும்பும் திசையெல்லாம் ட்ரம்ப் பெயர்கள் …

Admin

ATM-ல் பணமில்லாத வங்கிகளுக்கு அபராதம்…. ரிசர்வ் வங்கி அறிக்கை….

Shobika