இந்தியா

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த கிச்சா சுதீப்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சுதீப், நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துள்ளார்..

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரபலங்கள், தன்னார்வல நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர்.

ALSO READ  55 நாட்களில் 6000 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளைஞர்

இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் சிச்சா சுதீப். இவர் தற்போது சைலண்டாக கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓபவ்வனஹள்ளி அரசுப்பள்ளி, செல்லகேரே அரசுப்பள்ளி, பரசுராம்புரா அரசுப்பள்ளி, சித்ரதுர்கா அரசுப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளை தத்தெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மேலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை தருவதோடு, ஆசிரியர்களின் சம்பளச் செலவுகளையும் சுதீப் ஏற்றுள்ளார். டிஜிட்டல் வழி கல்விக்காக இந்தப் பள்ளிகளில் சுதீப் கணினிகளை நிறுவியுள்ளார். இந்த பள்ளியின் வசதிகளை தொடர்ந்து கண்காணிக்க ஒரு தன்னார்வலர் குழுவை நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ  சூட்கேசுக்குள் நண்பனை அடைத்த மாணவன்… சிக்கியது எப்படி...

தற்போதும் கொட்டிகொப்பா 3, பில்லா ரங்கா பாஷா, தக்ஸ் ஆப் மால்குடி, ஃபேண்டம் உள்ளிட்ட நான்கு கன்னட படங்கள் கிச்சா சுதீப் கைவசம் உள்ளன. மேலும் கன்னடா பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா உயிரிழப்பு; உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா !

News Editor

Ставки На Спорт В России На Sports Ru: Список Лучших Букмекеров России, Последние Новости, Актуальные Прогнозы На Спортивные Матч

Shobika

கங்கையில் மிதந்த குழந்தை.. .!

naveen santhakumar