இந்தியா

கடற்கரையை நோக்கிச் செல்லும் லட்சக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள்- வைரல் வீடியோ…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புவனேஸ்வர்:-

ஒடிஷா மாநில கடற்கரையில் முட்டையை விட்டு வெளியே வந்த லட்சக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடற்கரையை நோக்கிச் செல்லும் காட்சிகளும் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டம் அருகே ருஷிகுல்யா பகுதி ஆமைகள் அடைகாத்து குஞ்சு பொரிப்பதற்காக முக்கிய கேந்திரமாக கிழக்கு கடற்கரை பகுதியில் திகழ்ந்து வருகிறது.

ருஷிகுல்யா கடற்கரைப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஆமைகள் ஆயிரக்கணக்கான கூடுகளில் முட்டையிட்டு அடைகாத்து வந்தது இது கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டு இருந்தது.  இதன்படி ருஷிகுல்யா (Rushikulya), நாசி 2 தீவுகள் (Nasi-2 Islands), காஹிர்மதா (Gahirmatha) ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையில் இருந்து வெளியே வந்த காட்சிகளை சுஷாந்த நந்தா (Susantha Nanda) என்ற ஐஎப்எஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொதுவாக ஆமைகளின் அடைகாக்கும் காலம் 40 நாட்கள் என்று கூறப்படுகிறது. இவை கடந்த மார்ச் மாதங்களில் அடைகாக்க தொடங்கி இருக்ககூடும். ஊரடங்கு காரணமாக மனித நடமாட்டம் இல்லாத காரணத்தால் எந்தவித இடையூறுகளும் இன்றி இவை அடைகாத்து குஞ்சு குறித்து தற்போது இந்த கடற்கரையை நோக்கி செல்கிறது.

ALSO READ  பூமி பூஜைக்கு தயாராகும் அயோத்தி ராமர் கோவில்....

இதேபோல மற்றொரு வன அதிகாரியான பத்ரக் (DFO Bhadrak) தனது ட்விட்டர் பக்கத்தில் ஆமைகள் கடற்கரையை நோக்கிச் செல்லும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

கிழக்கு கடற்கரை பகுதியில் குறிப்பாக ஒடிசா கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏராளமான ஆமைகள் குஞ்சு பொறித்து வருகிறது. இதில் அரிதான ஆமைகள் என்று ஆலிவ் ரிட்லி (Olive Ridley) ஆமைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ  лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

உலக அளவில் மொத்த ஆலிவ் ரிட்லி ஆமைகளின் 50 சதவீதம் அளவிற்கு ஒடிசா கடற்கரையில் அடைகாத்து குஞ்சு குறிப்பதாக ஒடிசா வனவிலங்கு அமைப்பு (Odisha Wildlife Organisation) கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகள் இப்போது திறக்க வேண்டாம் என ஐ சி எம் ஆர் பேராசிரியர் நவீத் விக் தகவல்

News Editor

இந்தியாவில் முதன் முறையாக ஃபோக்ஸ்வேகன், அவ்டி மீது வழக்குப் பதிவு…

naveen santhakumar

SBI -ன் அட்டகாசமான அறிவிப்பு:

naveen santhakumar