இந்தியா

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு !

சீனாவில்  தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்  1 லட்சத்து 15ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 630 பேர் இந்த நோயினால் உரியிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients

Related posts

பிரபல ஹோட்டலின் ஒரு கிளையை கைலாசாவில் திறக்க…. நித்தியானந்தாவிடம் கோரிக்கை விடுத்த…. ஹோட்டல் உரிமையாளர்:

naveen santhakumar

என்னாது?????….மாட்டுச் சாணத்துல ‘சிப்’பா….!!!!!!

naveen santhakumar

10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக நடத்தப்படும்: சிபிஎஸ்இ….

naveen santhakumar