இந்தியா

கொரோனாவின் தாக்கம் குறையாததால் கர்நாடகாவில் ஜூன்-14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடகா:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக ஜூன்-7 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் போல் இல்லாமல் தற்போது பாதிப்பு குறைந்தாலும் தினசரி 15% பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகின்றனர். பல கிராமப்புறங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர்.

இதனால் அம்மாநில அரசு ஜூன்-14 வரை தற்போது அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி உள் மாவட்டங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் அனைத்தும் வழக்கம் போல் இருக்கும். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகளுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதியம் 2 மணி வரை நீடிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  No Honking சவால் - அசத்தும் பெங்களூரு…!

தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழும், மேலும் இறப்பு எண்ணிக்கையும் குறைந்தால் மட்டுமே தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 61 நாட்களில் பெங்களூரில் மொத்தம் 7.2 லட்சம் கோவிட் -19 வழக்குகள் மற்றும் 8,716 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் செப்டம்பர் மாதத்தில் மூன்றாம் அலை கொரோனா தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனோ வைரசால் உயிரிழந்தால் நான்கு லட்சம் இல்லை- மத்திய அரசு திடீர் பல்டி. 

naveen santhakumar

நிலத்திலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

News Editor

தெலங்கானா என்கவுண்டர் குறித்து நடிகை சமந்தா ட்விட்டர் பதிவு…

Admin