இந்தியா

மத்தியப் பிரதேச கவர்னர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபால்:-

மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் (வயது 85) உடல நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார். இதனை அவரது மகன் அசுதோஷ் தெரிவித்து உள்ளார்.

ஆளுநர் தாண்டன் ஜூன் 11 அன்று சுவாசப் பிரச்சினை காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் (Medanta Hospital) அனுமதிக்கபட்டார். அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சலும் இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு வெண்டிலேஷன் பொருத்தப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.

ALSO READ  Mostbet-AZ90 Bukmeker və Kazino Azərbaycanda Bonus 550+250F

50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் இருந்த லால்ஜி தாண்டன் இரண்டு முறை உத்தரப்பிரதேசத்தின் மேலவை உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் மூன்று முறை உத்தரப்பிரதேசத்தின் எம்எல்ஏவாக பணியாற்றியுள்ளார். 15ஆவது நாடாளுமன்றத் தேர்தலின்போது எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாண்டன் உத்தரபிரதேசத்தில் கல்யாண் சிங் அரசில் அமைச்சராகா இருந்து உள்ளார். பின்னர் பாஜக-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியின் மாயாவதி ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்து உள்ளார். மேலும் பீகார் மாநிலத்திலும் ஆளுநராக பணியாற்றியுள்ளார்.

ALSO READ  ''வேர்க்கடலைக்குள் வெளிநாட்டுப் பணம்''- அதிகாரிகளை வியக்கவைத்த நூதன கடத்தல்

லால்ஜி தாண்டன் மறைவை அடுத்து உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் மத்திய பிரதேச ஆளுநராக கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xbet Türkiye Casino İncelemesi Bilgilendirici Ve Yardımcı

Shobika

MostBet Somalia login va ro’yxatdan o’tish, onlayn tikish uchun promo-kod, mobil ilova

Shobika

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 17 பதக்கங்கள் பெற்று சாதனை

News Editor