இந்தியா

மம்தாவிற்கு சொந்த வீடு கூட இல்லை; பிரமாணப் பத்திரத்தில் வெளியான தகவல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதியில் களமிறங்குகிறார். அப்பகுதியில், செல்வாக்கு மிகுந்த தனது கட்சியின் முன்னாள் அமைச்சரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இதனையொட்டி மம்தா பானர்ஜி அத்தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதோடு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்த மம்தா பானர்ஜியின் சொத்து குறித்த தகவல்கள் வெளியாகிவுள்ளது.

2019- 2020 ஆண்டில் 10 லட்சத்து 34 ஆயிரத்து 370 ரூபாய் சம்பாதித்ததாக பிரமாணப்  பத்திரத்தில் மம்தா கூறியுள்ளார். கையில் ரொக்கமாக 69 ஆயிரத்து 255 ரூபாய் இருப்பதாகவும், வங்கிக் கணக்குகளில் 13.53 லட்சம் இருப்பதாகவும், தேசிய சேமிப்பு பத்திரங்களில் 18 ஆயிரத்து 490 ரூபாய் முதலீடு இருப்பதாகவும் மம்தா அதில் தெரிவித்துள்ளார். மேலும், 43 ஆயிரத்து 837 ரூபாய் மதிப்புள்ள 9 கிராம் தங்கம் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ள மம்தா, அனைத்தையும் சேர்த்து தனது அசையும் சொத்துகளின் மதிப்பு 16.72 லட்சம் எனக் கூறியுள்ளார். தனக்குச் சொந்தமாக கார், வீடு ஆகியவை இல்லையென்றும் மம்தா குறிப்பிட்டுள்ளார். 


Share
ALSO READ  1xbet 보너스 사용법 알아보기 메인 계정과 보너스 계정의 차이 코리아벳
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கறுப்பு பூஞ்சை நோய்; புதுச்சேரியில் முதல் உயிரிழப்பு !

News Editor

சொந்த கணவரை மீண்டும் திருமணம் செய்த பெண் – எதற்கு தெரியுமா?

Admin

பேராசிரியர் சாலமன் பாப்பையா, தமிழக வீராங்னை அனிதா மறைந்த பின்னணி பாடகர் எஸ் .பி . பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகள் வழங்கினார்

News Editor