இந்தியா

சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்ல நவீன பாட் ஓட்டல்கள் மும்பை ரயில் நிலையத்தில் திறப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பாய்

மும்பாய் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்ல நவீன பாட் ஓட்டல் அறைகளை ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே காணொளி மூலம் திறந்து வைத்தார்.

Inside The Swanky Pod Rooms At Mumbai Central Railway Station

பாட் ஓட்டல்கள் (காப்ஸ்யூல் ஓட்டல்கள்) முதன் முதலாக 1970 ஆண்டுகளில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. அதுபோன்று பல்வேறு நாட்டின் ரயில் நிலையங்களில் பாட் ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் முதன் முறையாக மும்பாய் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  தஜிகிஸ்தானின் பல பகுதிகள் எங்கள் நாட்டைச் சேர்ந்தது- சீனா… 
Mumbai Central Railway Station Gets Pod Hotels

இந்த பாட் ஓட்டலில் மொத்தம் 48 அறைகள் உள்ளன. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. சொகுசான படுக்கைகளுடன் தொலைக்காட்சி பெட்டியுடன் அனைத்து இணைய சேவை வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

Indian Railways To Launch Japanese-Style Pod Hotel With WiFi, AC At Mumbai  Station

அதுபோன்று மொபைல் போன் சார்ஜர் பாதுகாப்பு பெட்டகம் புத்தகம் படிக்கும் விளக்கு ஆகியவைகளும் பொருத்தப்பட்டுள்ளது. பாட் ஓட்டலில் தங்குபவர்களுக்கு பொதுவான கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. பாட் ஓட்டலில் தங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியை இலவசமாக வழங்கப்படுகிறது.

ALSO READ  Mostbet Azerbaycan rəsmi casino Giriş və qeydiyyat Mostbet A

பாட் ஓட்டலில் தங்குவதற்காக 12 மணி நேரத்திற்கு ரூபாய் 999 ம் 24 மணி நேரத்திற்கு ரூபாய் 1999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா???

naveen santhakumar

பிரிட்டனில் வந்தடைந்தது உருமாறிய கொரோனா – தமிழகத்திற்கு அலெர்ட்

naveen santhakumar

ப.சிதம்பரத்தை ஊழல் அரசியல்வாதி என விமர்சித்த ”The Diplomat” பத்திரிக்கை

naveen santhakumar