இந்தியா

‘உங்க கூட தாஜ்மகாலுக்கு நான் வரல’ … ட்ரம்ப் பயணத்தில் பின்வாங்கும் மோடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய சுற்றுப்பயணத்தின்போது தாஜ்மஹாலுக்கு செல்லும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் நாளை நண்பகல் 12 மணியளவில் அகமதாபாத்தில் வருகிறார். அங்கிருந்து சமர்பதி ஆசிரமம் வரை ட்ரம்ப்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிபர் ட்ரம்ப், அதன்பின் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்கிறார்.

ALSO READ  ஜார்க்கண்ட் புதிய கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன்!

இந்நிலையில் இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ட்ரம்ப் குடும்பத்தினர் எந்தவித இடையூறும் இல்லாமல் தாஜ்மகாலை சுற்றி பார்க்க வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆக்ரா நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாஜ்மகால் பயணத்தை முடித்த பின்னரும் டெல்லி செல்லும் ட்ரம்ப் அங்கு பிரதமர் மோடியுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பணக்கார நாடாக மாறும் இந்தியா- 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு…..

naveen santhakumar

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி…

naveen santhakumar

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி; 1,000 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பாலகோபால்…!

naveen santhakumar