தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஆஞ்சநேயர் கோயிலில் குரங்கு ஒன்று ராமாயணம் படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தான் இந்த ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆஞ்சநேயர் கோவிலில் சுந்தரகாண்ட பாராயணம் நடந்து கொண்டிருந்த போது அங்கு குரங்கு ஒன்று வந்தது.
அங்கு ஆஞ்சநேயர் சிலை முன்பு வைக்கப்பட்ட ராமாயண புத்தகத்தை திறந்து படிப்பது போல ஒவ்வொரு பக்கமாக பார்த்தது.
இவ்வாறு சுமார் 15 நிமிடங்கள் ராமாயணத்தைப் படிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
கோவிலில் குரங்கு ஒன்று ராமாயணம் படிக்கும் தகவலை கேள்விப்பட்டு, அங்கு திரண்ட கிராம மக்கள் அந்த குரங்கை அனுமனின் வடிவமாக எண்ணி வணங்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.