இந்தியா

கொரோனா நோயாளியின் இரத்த மாதிரியை தூக்கி சென்ற குரங்கு…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மீரட்:-

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கொரோனா நோயாளியின் ரத்த மாதிரியை குரங்கு ஒன்று தூக்கி சென்றதாக செய்தி ஒன்று வெளியானது. 

மீரட் மருத்துவக்கல்லூரியில் ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த 3 ரத்த மாதிரிகளை குரங்கு தூக்கிச் சென்றது. இந்த ரத்த மாதிரிகள் கொரோனா நோயாளிகள் என்று சந்தேகப்படும் நபர்களிடம் இருந்து பெறப்பட்டது என்றும் ரத்த மாதிரிகள் முழுமையாக சோதனை செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

ALSO READ  இந்தியாவில் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு 
Courtesy.

ஆனால் இந்த ரத்த மாதிரிகளில் கொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகள் எதுவும் இல்லை என்று மீரட் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் S.K.கார்க் (S.K.Garg) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இதன்மூலமாக குரங்குகளுக்கு பரவும் என்று நிச்சயமாக கூற முடியாது என்றும் கூறினார்.

இதனிடையே அமெரிக்காவின் பாஸ்டன் (Boston) நகரில் உள்ள ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் (Harvard Medical School) சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் குரங்குகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறனை குரங்குகளால் வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் கொரோனா நோயினால் குரங்குகள் பாதிக்கப்படாது என்றும் கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Upwards Online Casino’ya Kaydolun Ve Kişisel Dolabınıza Giriş Yapın

Shobika

யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த அரசுப் பேருந்து கண்டக்டர் : போலாம் ரைட் !

Admin

பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் செத்துப் போய் விடுங்கள்-
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

News Editor