இந்தியா

JEE, NEET பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை; மத்திய அமைச்சகம் அதிரடி!  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்த ஆண்டு நடைபெறவுள்ள  JEE, NEET தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில், எவ்வித மாற்றமும் இல்லை என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்களின் சுமைகளைக் குறைப்பதற்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் JEE, NEET தேர்வுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் வருமா என பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் நடைபெற உள்ள JEE, NEET தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது என்றும், ஆனால், விருப்பத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ  மாறுவேடத்தில் மீண்டும் களமிறங்கியுள்ள பப்ஜி …!

JEE தேர்வில் 90 கேள்விகள் கேட்கப்படும் என்றும், அதில் 75 கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதுமானது, என்றும் அறிவித்துள்ளது. NEET தேர்விலும் இதேபோல் கூடுதல் விருப்பத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், CBSE & மாநில அரசுகளின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றமில்லை என்றும், மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

#NEET #JEE #CBSE #centralgovernment #educationminister #centralgovt #tamilnadu #india #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Скачать Mostbet на Android официальный сай

Shobika

காதலை ஏற்ற 12 மணிநேரத்தில் காதலனை கரம்பிடித்த காதலி

Admin

இனி நோ ஃபெயில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….

naveen santhakumar