இந்தியா

இந்தியாவில் 400-ஐ கடந்தது புதுவகை கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். அதன்படி மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதால் நேற்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடித்தினார். அப்போது அவர் வேகமாக கொரோனா பரவலை தடுத்து நிறுத்தியாக வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் மரபியல் மாற்றமடைந்து மூன்று வகையான கொரோனா வைரஸ்கள் பரவி வருகிரது. அது  இங்கிலாந்து கொரோனா வைரஸ், பிரேசில் கொரோனா வைரஸ். தென் ஆப்ரிக்க கொரோனா வைரஸ் என பிரிக்கப்பட்டு நோய் பாதித்தவர்களை கதறியப்பட்டு வருகிறது. 

ALSO READ  முடியை தவறுதலாக ஒட்ட வெட்டியதற்கு அபராதம் ரூபாய் 2 கோடி

இந்நிலையில் இந்த மூன்று வகையான மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. இந்த மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ், வேகமாகப் பரவக்கூடியது என்றும், ஏற்கனவே கொரோனாவிலிருந்து மீண்டவர்களையும் இந்த மரபணு மாற்றமடைந்த வைரஸ் தாக்கும் எனவும் மத்தியஅரசு எச்சரித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Официальные Казино и России: Лучшие Интернет Бренды С Онлайн Слотам

Shobika

ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் 12 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தகவல்

News Editor

ஒட்டகப்பால் வேண்டி பிரதமர் மோடிக்கு ட்விட் செய்த பெண்மணி… ரயில்வே அதிரடி…

naveen santhakumar