இந்தியா

கொரோனாவின் லேட்டஸ்ட் வெர்ஷன் ‘டெல்டா பிளஸ்’ :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், புதிது புதிதாக உருவெடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது.அந்த வரிசையில், அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2′ மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த வகை, இந்தியாவில் தற்போது குறைவாகவே காணப்படுவதால் உடனடி கவலைக்கு அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக மோசமான 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் மேலும் உருமாறி புதிய ‘டெல்டா பிளஸ்’ வகையாக தோன்றியுள்ளது.

ALSO READ  பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது:

தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார்.

இப்போதைக்கு புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்றாலும், அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதே விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்தாக காணப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மத்திய அரசு விவாசியிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை !  

News Editor

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொத்தமல்லி செடி…

naveen santhakumar

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1 சத இடஒதுக்கீடு

News Editor