இந்தியா

வருமான வரி செலுத்த புதிய இணையதளம்; புதிய இணையதளம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் இனி புதிய இணையதள பக்கத்தில் வரி விவரங்களை சமர்ப்பிக்கும் வசதி கடந்த ஜூன் 7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய இணையதள பக்கத்தில் பயனர்களின் வசதிக்காக சில முக்கிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, http://www.incometaxindiaefiling.gov.in/ என்ற பழைய இணைய தள பக்கத்துக்கு பதிலாக புதிதாக http://www.incometaxgov.in/ என்ற இணையதள பக்கத்தை வருமான வரித்துறை உருவாக்கியிருக்கிறது.

இது தவிர, செல்போன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் வசதியையும் வரும் 18ம் தேதி வருமான அறிமுகப்பட உள்ளது. மேலும், வருமான வரி தாக்கலின்போது வரி செலுத்துவோருக்கு பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க வாடிக்கையாளர் சேவை மையமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வருமானவரி செலுத்துவோருக்கும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வருமானவரி தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒற்றைச்சாளர முறையில் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கம் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ  நம்பர் பிளேட் இல்லாததல் சொகுசு காருக்கு ரூ. 27.68 லட்சம் அபராதம்

இந்த புதிய இணையத்தளத்தில் உள்ள வசதிகள்:-

இந்த புதிய இணையதள பக்கத்தில் வருமான வரி தாக்கல் விவரங்களை செலுத்தி, விரைவாக டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் பெறும் வசதி எளிதாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வரி செலுத்தும் முறைப்படி, பயனர்கள் இனி வங்கி ஆன்லைன் கணக்கு, யுபிஐ, கடன் அட்டை, ஆர்டிஜிஎஸ், என்இஎஃப்டி உள்ளிட்டவற்றில் ஏதாவதொரு வசதியை தேர்வு செய்து தங்களுடைய வரியை தாக்கல் செய்து கொள்ளலாம்.

ALSO READ  நந்தா கல்விக்குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை:

வருமான வரி செலுத்துவோர் அவருடைய பான் எண் மூலம் அவரது இணைய கணக்குப் பக்கத்துக்குள் நுழைந்தவுடனேயே எவ்வளவு வரி செலுத்த வேண்டும், நிலுவை என்ன போன்றவற்றை தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

வருமான வரி செலுத்தும் படிவம் 1,4 (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) மற்றும் படிவம் 2 (ஆஃப்லைன்) ஆகியவற்றின் மூலம் விவரங்களை பதிவேற்றலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை.

ஐடிஆர் 3,5,6,7 ஆகியவற்றின்கீழ் விவரங்களை பதிவு செய்வோருக்காக விரைவில் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.

New Income Tax e-filing website www.incometax.gov.in: Know New ITR Filing  portal features and benefits - All You Need to Know

புதிய சேவை மையம் மூலம் வரி செலுத்துவோருக்கு ஏதேனும் குறைகள் இருந்தாலோ விவரங்கள் தேவைப்பட்டாலோ அவற்றை வரி செலுத்துவோர் பெறலாம். அவரது வசதிக்காக அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கான விடைகள், விளக்க காணொளிகள் போன்றவை இணையதள பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

வரி செலுத்துவோர், வருமான வரி தாக்கலுக்கான தங்கள் சுயவிவரத்தை புதுப்பித்து சம்பளம், வீட்டுச் சொத்து, வணிகம் / தொழில் உள்ளிட்ட வருமான விவரங்களை முன் கூட்டியே பதியலாம்

கூடுதல் வசதியாக, புதிய இணையதள பக்கத்தில் புதிய வருமான வரி படிவங்கள், தொழில்முறை வரி செலுத்துவோருக்கான படிவங்கள், வருமான வரித்துறை அனுப்பும் நோட்டீஸ்களுக்கு ஆன்லைனிலேயே பதில் தரும் வசதி, மேல்முறையீட்டு வசதி போன்றவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் டிசம்பருக்குள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்-NIMHANS..

naveen santhakumar

1xbet Türkiye Casino İncelemesi Bilgilendirici Ve Yardımcı

Shobika

டிரம்ப் உணவு உண்ண தயாராகும் தங்க-வெள்ளி பாத்திரங்கள்…

Admin