இந்தியா

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால், பிரிட்டன் – இந்தியா இடையே வினமா போக்குவரத்து நிறுத்தம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான்     மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்த நிலையில் தான் பிரிட்டனில் தற்போது பரவி வருகிறது புது வகையான கொரோனா  வைரஸ்.

அதனைத் தொடர்ந்து பிரிட்டனிலிருந்து பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கு பிரிட்டன் விமானம் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புது வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால் மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனை அடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை ரத்து செய்ய வேண்டும் மென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்  உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பிரிட்டனில் பரவி வரும் புது வகையான கொரோனா  வைரஸ் காரணமாக பிரிட்டனிலிருந்து  வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளது. மத்திய அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளது. என்றும்,  கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் குறித்து எப்படி கையாள வேண்டும் என்று நன்கு அறிந்துள்ளது. அரசு மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என கூறியிருந்தார்.

ALSO READ  Промокоды 1xBet Бонусы 1хБет 6500 Лучшие коды декабря 202
3D illustration

அவரை தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தரப்பிலிருந்து, “பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, இந்த நிலையில்தான் பிரிட்டனில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. என்றும், டிசம்பர் 22ஆம் தேதி இரவு 12 மணியிலிருந்து விமானங்கள் நிறுத்தப்படும், மேலும் 22 ஆம் தேதி இரவு பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா  வைரஸ் பரிசோதனைகள் செய்யப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“spacewe

Shobika

இரயில் கட்டணம் அதிகரிப்பு; அதிர்ச்சியில் மக்கள் !

News Editor

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு..!

naveen santhakumar