இந்தியா

கட்டணம் கிடையாது- பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜன் தன் வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படாது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது.

SBI customers ALERT! State Bank of India makes BIG announcement for digital  transactions charges

ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

இத்திட்டத்தின் கீழ் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஜன் தன் வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ  வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. நடந்தது என்ன?

எஸ்.பி.ஐ. வங்கி தனது அடிப்படை சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்துக்கு நான்கு முறைக்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இதன்படி, கடந்த 2016ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் தொடங்கியது. அதன் பின்னர் இந்தக் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த தொகையையும் திரும்ப வழங்கி வருகிறது.

ALSO READ  Скачать Mostbet на Android официальный сай

இதுவரை அரசின் உத்தரவின்பேரில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.90 கோடியை திரும்ப வழங்கிவிட்டது. எனினும் இன்னும் ரூ.164 கோடி பாக்கி உள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் பரிவர்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவாதம் இன்றி புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை

News Editor

டோமினிகா சிறையில் இருந்து ஆண்டிகுவா திரும்பினார் மெகுல் சோக்ஸி..!

naveen santhakumar

ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது …!

naveen santhakumar