இந்தியா

ஒடிசா ரயில் விபத்து..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே 3 ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி நேற்று இரவு 7 மணியளவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது போல், மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. ஒடிசாவின் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட சில ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்த போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.

அடுத்தடுத்து 2 பயணிகள் ரயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம், போலீசார் என பல்வேறு மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரயில் விபத்து நடைபெற்ற பகுதியை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று நேரில் பார்வையிட்டார். மேலும், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  வன்முறைக்கு மம்தா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆளுநர் கோரிக்கை !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

Shobika

பீகார் முன்னாள் முதல்வர் லாலுவிற்கு கொரோனா தொற்று இல்லை :

naveen santhakumar

நிலவில் பத்திரமாக தரை இறங்கிய சந்திராயன்2 ரோவர்- சென்னை இன்ஜினியர்… 

naveen santhakumar