இந்தியா

பிரதமர் மோடி திறந்து வைக்கும் உலகின் நீளமான சுரங்கப்பாதை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இமாச்சலப் பிரதேசம்:

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான சுரங்கப்பாதையை, பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இமாச்சலப் பிரதேசத்தில், மணாலியில் இருந்து லே வரை ரோத்தங் கணவாய்ப் பகுதியில், மலையைக் குடைந்து சுமார் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு குகைவழிப்பாதை ஒன்று  அமைக்கப்பட்டுள்ளது.

அடல் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த குகைப்பதையானது சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையில், 10 ஆயிரம் அடி உயரத்தில், 10 ஆண்டுகள் கடும் உழைப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அடல் சுரங்கத்தின் மூலம் மணாலியில் இருந்து லே செல்லும் பயண தூரம் 46கி.மீ தூரம் குறைவதுடன், 4 மணி நேர பயண நேரமும் சேமிக்கப்படும்.அதுமட்டுமல்லாது,இந்த சுரங்கம், லே பகுதிக்கு ராணுத்தினர் விரைவாக சென்றடையவும்,ராணுவ தளவடாங்களை தாமதமின்றி கொண்டு செல்லவும் ஏதுவாக அமைகிறது.

ALSO READ  தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிச்சாமி:

பாதுகாப்பு கருதி சுரங்கத்திற்குள் ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்களும், ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திலும் அவசர கால வெளியேறும் வழியும் அமைக்கப்பட்டுள்ளது.

ராணுவம் தவிர்த்து பொதுப்போக்குவரத்திலும், இந்த சுரங்கம் பெரும் பங்கினை ஆற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.நாள் ஒன்றிற்கு 3000 கார்கள் மற்றும் 1500 டிரக்குகள் இந்த சுரங்கம் வழியே செல்லும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகள் திறப்பதில் அவசரம் வேண்டாம் – விஞ்ஞானி ராமன் கங்காகேட்கர்

News Editor

டிசம்பரில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

naveen santhakumar

Ставки На Спорт В России На Sports Ru: Список Лучших Букмекеров России, Последние Новости, Актуальные Прогнозы На Спортивные Матч

Shobika