இந்தியா

பஞ்சாப் தேர்தலில் பஞ்சாக பறந்த பாஜக; 53 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இமாலய வெற்றி..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

ALSO READ  ஓயாத உதவிகள்; கிர்கிஸ்தானில் தவிக்கும் மாணவர்களை அழைத்து வரும் சோனு சூட்… 

பஞ்சாபில் மொத்தமுள்ள 8 மாநகராட்சிகளில், 8 மாநகராட்சிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இவற்றுள் பதிந்தா மாநகராட்சியில் 53 வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. மேலும் ஒரு மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. ஒரு மாநகராட்சியில் இன்று முடிவு அறிவிக்கப்படும் என கூறியிருந்த நிலையில் தற்போது அதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றுள்ளது. 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்தத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்மணி ஒருவர் கூறியதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய பிரதமர் மோடி..!!!!

naveen santhakumar

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6-வது அணுஉலைக்கான கட்டுமான பணி தொடக்கம்

News Editor

இன்னும் 6-8 வாரங்களில் கொரோனா 3வது அலை……..!!!!!!

Shobika