இந்தியா

தூக்கி வீசப்படும் மாஸ்க்குகள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் முகக் கவசங்கள் பயன்படுத்திய பின்னர் பொதுவெளியில் வீசி செல்வதால் வேறு தொற்றுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முகக் கவசங்களை அணிந்து வருகிறார்கள்.

இந்த முக கவசங்களை குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே அணிய வேண்டும் என்றும் பயன்படுத்திய பின்னர் அதனை முறையாக குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

ALSO READ  ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் வரலாறு காணாத அளவிலான கனமழை:

ஆனால் பொதுமக்கள் பலர் தாங்கள் பயன்படுத்திய முகக் கவசங்கள் பொதுவெளியில் தூக்கி வீசி விட்டுச் செல்கிறார்கள். இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இதனை முகர்ந்து பார்க்கும் மாடு மற்றும் நாய் போன்ற விலங்குகளுக்கு வேறு ஏதேனும் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள் எனவே பயன்படுத்திய முக கவசங்களை முறையாக குப்பைத்தொட்டியில் மட்டுமே போடவேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உ.பி: ஊரடங்கு விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்து ஆடுகளை கைது செய்த காவல்துறை… 

naveen santhakumar

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்- RBI மறுப்பு

naveen santhakumar

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தவருக்கு 45 நாட்கள் சிறை தண்டனை

News Editor