இந்தியா

அனைத்து மாநில முதல்வர்களுடனும் வருகின்ற 11-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட கொரோனாவிற்கான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து நாடு முழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகையானது நடந்தது.மாநிலம் முழுவதும் 190 இடங்களில் நடைபெற்ற ஒத்திகையை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி  ஹர்ஷ்வர்தன் இன்று ஆய்வு செய்தார்.

ALSO READ  ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி !

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், “அடுத்த சில நாட்களில் நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும். முதலில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், அடுத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்” என்றார்.

இந்நிலையில் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடனும் வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.ஆலோசனையில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்

News Editor

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்…

Shobika

Pin Up APK download Android və iPhon

Shobika