இந்தியா

கால்வான் நமதே!!.. மோடி லடாக்கில் படை வீரர்களிடையே கூறிய திருக்குறள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லே-லடாக்:-

லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில், திடீரென இன்று பிரதமர் மோடி லடாக் சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார். 

கால்வாய் மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்தார். மேலும் ராணுவம், வான்படை மற்றும் இந்தோ-திபத்திய எல்லை படையினர் இடையே மோடி உரையாற்றினார்.

அங்கு முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பிரதமருடன் மோடி உரையாற்றினார். மோடி உரையாற்றும் பொழுது திருக்குறள் ஒன்றினை மேற்கோள் காட்டினார்.

அவர் கூறிய திருக்குறள்,

ALSO READ  வீர மரணமடைந்த 20 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது இந்திய ராணுவம்…

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.

வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.

படைமாட்சி எனும் அதிகாரத்தில், குறள் எண் 766-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது. 

நமது ராணுவ வீரர்கள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பெருமையடைய செய்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கு நமக்கு சொந்தமானது என்பதை உறுதியுடன் கூறுகிறேன். லடாக் முதல் கார்கில் வரை உங்களின் வீரத்தை அறிய செய்துள்ளீர்கள். நமது எதிரிகளின் சதி திட்டம் ஒரு போதும் வெற்றி பெறாது.

ALSO READ  100 மணி நேர போரட்டத்திற்கு பின் சிறுவன் மீட்பு!

நமது இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடற்கரையை நோக்கிச் செல்லும் லட்சக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள்- வைரல் வீடியோ…

naveen santhakumar

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா சாதனை

Admin

வடகொரியாவுக்கு உதவிய இந்தியா… 

naveen santhakumar