இந்தியா

6வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி!…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆறாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

இந்த உரையின் போது விவசாயிகளுக்கும் வரி செலுத்துவோருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். 

இன்று நரேந்திர மோடி ஆற்றிய ஆறாது உரையின் சிறப்பம்சங்கள்:-

கொரோனா ஊர்களிலிருந்து இரண்டாம் கட்ட தளர்வுக்கு (Unlock 2.0) நமது தேசம் செல்கிறது. இந்த தளர்வு நேரத்தில் நாம் செய்யும் சிறு தவறுகள் கூட பெரிய விளைவை ஏற்படுத்தும்.

முன்பை விட நாம் தற்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வெளியில் செல்லும்போது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்லுங்கள்.

ALSO READ  கொரோனா 3வது அலை ஆரம்பம்…..?

இந்தியாவில் சட்டத்தை விட மேலானவர்கள் யாரும் இல்லை அதே இந்த நாட்டை ஆள்பவர்களுக்கும் பொருந்தும்.

உலக நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை நமது நாட்டில் குறைவாக உள்ளது.

இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் வங்கி கணக்கில் 31,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.  

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவின்றி தவிப்பதை தவிர்ப்பதற்காக ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளோம்.

பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

ALSO READ  'சிங்கம்' பட பாணியில் 2 கார்களுக்கு நடுவே வீரசாகசம் செய்த போலீஸ் அதிகாரி- ஐஜி நடவடிக்கை...

கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவது இந்த ஆண்டு நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் உதவி உள்ளது. 

கரிப் கல்யான் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வங்கி கணக்கில் 18 ஆயிரம் கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது.

சுயசார்பு இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகளில் மதிய உணவு திட்டம் ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்..!!

Admin

உ.பி-ல் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிடைசர்’ என்று பெயர் வைத்த பெற்றோர்…

naveen santhakumar

Mostbet Tr Resmî Web Sitesinde Giriş Ve Kayıt Olm

Shobika