இந்தியா

மக்கள் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் மோடி உரை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவ்வப்போது உரையாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுவதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.அதன்படி அவர் மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் மோடி தனது உரையில்,”கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா மிக நீண்ட போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது. பெரிய போராட்டத்தை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் தைரியத்துடன் மக்கள் தங்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றனர்.

ஊரடங்கு வேண்டுமானால் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும்  இருக்கிறது.எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பல நாடுகளில் கொரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியுள்ளது.

ALSO READ  அனைத்தும் தனியார்மயம்- நிர்மலா சீதாராமன் ஐந்தாம் கட்ட அறிவிப்பு... 

கொரோனா தாக்கத்திற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதனை கொண்டு வரும் முயற்சியில் உலக நாடுகளுடன் இந்தியாவும் தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளது.விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும். அவ்வாறு மருந்து கிடைக்கும் போது அதனை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கையையும் நாம் தொடங்கியுள்ளோம்.

எனவே நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பண்டிகைக்காலம் நெருங்குவதால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சிறிய கவனக்குறையும் பெரிய பாதிப்பை உண்டாக்கி விடக்கூடும். எனவே மக்கள் கவனத்துடன் வரும் காலங்களில் இருக்க வேண்டும். அடுத்த சில மாதங்களையும் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டிய தேவை நமக்கு உள்ளது.

ALSO READ  அபுதாபியில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் குறைப்பு:

அதுமட்டுமின்றி குளிர்காலமும் வர இருப்பதால் அதிககவனம் வேண்டும். நவராத்திரி, தீபாவளி என பல பண்டிகைகள் வருகின்றன. எனவே இந்த காலத்தில் எச்சரிக்கை தேவை.நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன். இந்த பண்டிகை காலம் உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்”.என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது-பிரதமர் மோடி

Shobika

சீனாவிற்கு சென்று வந்ததை மறைத்த பெண் கைது….

naveen santhakumar

ராஜஸ்தானில் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 3 முதியவர்கள்.. பயன்படுத்திய மருந்துகள் என்ன??மருத்துவர்களுக்கு முதல்வர் பாராட்டு….

naveen santhakumar